மத்திய பிரதேசத்தில் அண்மையில் மாற்றுத்திறனாளி 11 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக விசாரித்த போலீசார் ரமேஷ் சிங் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் 2003-ல் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி 2013-ல் விடுதலையானார். 2014-ல் 8 வயது சிறுமியை கடத்தி சீரழித்த வழக்கில் மரண தண்டனை பெற்றார். 2019-ல் தொழில்நுட்ப காரணங்களை காட்டி, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது.