தைரியம் இருந்தால் அண்ணாமலையை சென்னை அண்ணா சாலை பகுதிக்கு வர சொல்லுங்கள் என துணை முதல்வர் உதயநிதி சவால் விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அவரை வர சொல்லுங்கள், என் வீட்டில் தான் இருப்பேன். இன்று (பிப். 20) எனக்கு கட்சி நிகழ்ச்சி இருக்கிறது. ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் செங்கலை பிரிப்பேன் என சொன்னார். பிரச்சனையை மாற்றுவதில் குறியாக இருக்கிறார்” என்றார்.