சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள கடையில் வாங்கிய பொரித்த மீனில் 50-க்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து குறித்த கடையை போலீசார் மூடினர். இந்த நிலையில் அங்குள்ள மீன் கடைகளில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று (பிப். 19) சோதனை நடத்தினர். அப்போது, கடைகளில் உள்ள உணவு தொடர்பாக புகார் வந்தால் கடையே இருக்காது என எச்சரித்தனர்.