காஞ்சிபுரத்தை சேர்ந்த 50 வயதான டேவிட் கிருஷ்ணகிரியில் உள்ள உறவினரை காண நேற்று (பிப். 19) போன போது நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற அவரை மூன்று சிறுவர்கள் கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். பின்னர் டேவிட்டை கீழே தள்ளிவிட்டு அவர் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடி சென்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த டேவிட் மருத்துவ சிகிச்சை பெறும் நிலையில் குற்றவாளிகளை போலீஸ் தேடுகிறது.