சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெளிச்சை என்ற பகுதியில் இன்று (பிப். 20) நடந்தது. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடப்பதை அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்த பின்னர் அதற்கு தடை விதித்தனர். உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பை தொடர அறிவுறுத்தினர்.