சிவகங்கை: காரைக்குடி கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து நேற்று (பிப். 19) நடுவழியில் நின்றதால் கல்லூரி மாணவர்கள் கீழே இறங்கி பேருந்தை தள்ளினார்கள். அதே போல சிவகங்கை ஒடுவன்பட்டி மலைச்சாலைக்கு அனுப்பப்பட்ட மற்றொரு அரசு பேருந்தும் நடுவழியில் நிற்க பயணிகள் மிகவும் திணறி போனார்கள். இதையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.