திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் கிணற்று பாசனத்தில் பீட்ரூட் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பீட்ரூட் சாகுபடிக்கு விதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படுகின்றது. விதையை நடவு செய்து பின் முளைக்காத இடங்களில் மீண்டும் விதை நடப்படும். பல முறை தவறிய பயிர் நடவு மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே வேளாண் பல்கலைக்கழக விதைகளை பெற்று தோட்டக்கலைத் துறை வாயிலாக நேரடியாக வியூகம் செய்ய வேண்டும். சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் பெற்ற புதிய முறைகளை செயல்படுத்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.