காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அதிரடி வீரர் ஃபகர் ஜமான் விலகியுள்ளார். பாகிஸ்தான் அணி நியூசிலாந்து உடனான முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், அரையிறுதிக்கு செல்ல மீதமுள்ள 2 போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டும். இந்நிலையில், இந்தியாவுடனான போட்டியில் ஃபகர் ஜமான் விலகியது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஃபகர் ஜமானுக்கு மாற்று வீரராக இமாம் உல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.