ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது வீராங்கனை யஷ்டிகா, ஜிம்மில் 270 கிலோ எடை கம்பியை தூக்கிய போது, அவரது கழுத்தில் அந்த கம்பி விழுந்ததில் உயிரிழந்தார். சம்பவத்தின் போது யஷ்டிகாவின் பயிற்சியாளர் ஆஷிஷ் உடன் இருந்த நிலையில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. யஷ்டிகா மரணம் குறித்து விசாரணை நடக்கிறது, இதனிடையில் கம்பியை தூக்கும் போது உடல் சமநிலையில் இல்லை என்றால், தசைகளில் அழுத்தத்தை அதிகரித்து மரணத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.