திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஏரிப்பாளையம் பகுதியில் தேவகோட்டையைச் சேர்ந்த மருதுபாண்டியன் கோவையில் உள்ள ஓட்டலில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரின் நண்பர் பிரபாகரன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் சென்று திரும்பி உள்ளார். பின்னர் தரிசனத்தை முடித்துக் கொண்டு பைபாஸ் சாலை வழியாக கோவைக்கு சென்று கொண்டிருந்தார். காரை பிரபாகரன் ஓட்டி வந்த நிலையில் முன் இருக்கையில் மருதுபாண்டியன் அமர்ந்திருந்தார். பின்னால் பிரபாகரன் மனைவி சிலம்பரசி மகன் நேந்திரன் இருந்தனர். கார் குறிஞ்சி சேரி கிராமத்து அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலை நேரத்தில் தடுப்புச் சுவற்றில் பயங்கரமாக மோதியது.
இதில் விபத்தில் மருது பாண்டியனும் சிலம்பரசியும் படுகாயம் அடைந்தனர். பிரபாகரனுக்கு லேசான காயம். அவரது மகன் நேந்திரனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் மருதுபாண்டியன் இறந்துவிட்டார். பிரபாகரன் சிலம்பரசி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கோவை செல்லும் வழியில் சிலம்பரசி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.