காஞ்சிபுரம்: கீர்த்தனா என்பவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை லக்க்ஷனாவின் தலையில் அலுமினிய பாத்திரம் நேற்று (பிப். 19) மாட்டிக்கொண்டது. இதனால் குழந்தை மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு தாய் கொண்டு சென்றார். அங்கு மருத்துவக் குழுவினர் போராடி ஆக்சா பிளேடு, கட்டிங் பிளேயர் உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் பாத்திரத்தை அறுத்து எடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.