ஹரியானாவில் சொற்ப வாக்குகளில் மட்டுமே பாஜக முன்னிலை
ஹரியானாவில் பாஜக 46 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. காலை முதலே 71 இடங்களில் முன்னிலை வகித்து வந்த காங்கிரஸ், 37 இடங்களாக சுருங்கி உள்ளது. பாஜக வேட்பாளர்கள், 2 இடங்களில் 100 வாக்குகள் வித்தியாசத்திலும், 2 இடங்களில் 70 வாக்குகள் வித்தியாசத்திலும், 6 இடங்களில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும் முன்னிலை வகித்து வருகின்றனர். எனவே நிலைமை எப்போது வேண்டுமானால் மாறலாம்.