கோவில்நிலம், நீரோடை ஆக்கிரமிப்பு வட்டாட்சியரிடம் புகார்
காங்கேயம் காடையூர் அருகே பசுவன் மூப்பன்வலசு பகுதியில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு சொந்தமான கோவிலை மாற்று சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் வழிபட இடையூறு செய்வதாகவும் வட்டாட்சியரிடம் புகார். ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிரசன்ன ஸ்ரீ கருங்குட கருப்பணசாமி மற்றும் ஸ்ரீ காணியாளசுவாமி கோவில்கள் மாற்று சமூகத்தின் தோட்டத்திற்கு உள்ளே உள்ளதாகவும் இதனால் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் அவர்களிடம் சாவியை வாங்கி செல்ல வேண்டியுள்ளதாகவும், கோவில் இடத்தை மீட்டுத் தரவும் தாங்கள் வழிபாடு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலரிடமும் 2 முறைக்கு மேல் மனுகொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். அரசாங்க நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதுகுறித்து கடந்த மாதம் முழுவதும் போராடி வருவதாகவும் அது குறித்து காங்கேயத்தில் புதிதாக வட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள மோகனன் அவர்களிடம் தெரிவித்ததாக கூறினர். மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள நீரோடையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர். வரும் 22ம் தேதி இதுகுறித்து நிலங்களை ஆய்வு செய்து அளவீடு செய்யும் பணியில் ஈடுபட போவதாக தெரிவித்ததாகவும் கூறுகின்றார். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் பெரியளவிலான அறப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.