கால்வாயில் கவிழ்ந்த கார்.. 7 பேர் பலி

78பார்த்தது
கால்வாயில் கவிழ்ந்த கார்.. 7 பேர் பலி
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ஷிவம்பேட்டை அருகே உசிரிக்கபள்ளியில் கார் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சிறு பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு கால்வாயில் கவிழ்ந்தது. இந்த கார் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த 2 சிறுமிகள், 4 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி