காபி பீன்ஸ் பழங்களில் இருந்து வருகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. காபி பீன்ஸ் உண்மையில் காபி மரத்தின் சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் சிறிய பழங்களாக காணப்படும். அதன் விதைகளில் இருந்தே காபி தயாரிக்கப்படுகின்றது. காபி குடிப்பதற்கு மட்டும் அல்லாமல் அழகுசாதனப் பொருட்களிலும் பிரபலமான ஒன்றாகும். ஏனெனின் காபியில் உள்ள காஃபின், சருமத்தை பொலிவாக்குவதற்கும் உடலுக்கு புத்துணர்வு வழங்குவதிலும் சிறந்து விளங்குகின்றவை என்பது குறிப்பிடத்தக்கது.