கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 1,700 கன அடியிலிருந்து 3,436 கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், வினாடிக்கு 2,680 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது