திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்டம் நரவலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமன் கடந்த 3-ம் தேதி சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்