குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 180 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து, பேட் செய்த லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பூரன் 61, மார்க்ரம் 58 மற்றும் பதோனி 28* ரன்கள் குவித்தனர். ப்ரசித் கிருஷ்ணா 2, ரஷித் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.