மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “பெண்களின் கண்ணியத்தை மட்டுமன்றி, சிவன், விஷ்ணுவை வணங்குபவர்களையும் அவமதித்துள்ளார். சனாதன தர்மத்தை மலேரியா கொசுவுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். கம்பராமாயணத்தில் பெண்களை போற்றிருக்கிறார்கள்; இப்போது கம்பன் காட்டிய பாதையை அழிக்கிறார்கள்" என்றார்.