புதுச்சேரி: காரைக்காலில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞருக்கு, விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் நூதன தண்டனையை போலீசார் வழங்கியுள்ளனர். பைக்கில் வேகமாக சென்ற இளைஞரை, ரோந்து பணியில் இருந்த மாவட்ட முதுநிலை கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த இளைஞர் நிற்காமல் சென்று விட்டார். அவரை கண்டுபிடித்து அழைத்து வந்த போலீசார், அவருக்கு இந்த நூதன தண்டனை வழங்கினர்.