தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோளை ஏற்று அண்ணாமலை காலணி அணிந்து கொண்டார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் இன்று (ஏப்.12) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றார். இதையடுத்து, உரையாற்றி அவர், அண்ணாமலை அவர்களுக்கு அன்பான வேண்டுகோள், காலில் செருப்பு அணிந்து கொள்ளுங்கள். 2026-ல் நமது ஆட்சி தான் என்று வேண்டுகோள் வைத்தார். இதைத்தொடர்ந்து அண்ணாமலை காலணி அணிந்து கொண்டார்.