ஓய்வூதியதாரர்கள் பலர் அவ்வப்போது ஓய்வூதிய நிலுவைத் தொகை குறித்து புகார் அளித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. புதிய விதிகளின்படி, வங்கிகள் ஓய்வூதியம் வழங்குவதை தாமதப்படுத்தினால் ஓய்வூதியதாரருக்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி செலுத்த வேண்டும். ஓய்வூதியம் அல்லது நிலுவைத் தொகை உரிய தேதிக்குப் பிறகு செலுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி அந்த தாமதத்திற்கு 8 சதவீத வட்டி செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.