வாட்ஸ்அப் செயலியின் சேவை இன்று இந்தியாவில் முடங்கியது. இதனால், ஆயிரக்கணக்கான பயனர்கள் செயலி மூலம் தகவல்களை அனுப்பவோ, ஸ்டேட்டஸ்களை பதிவேற்றவோ முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து நிகழ்நேர செயலிழப்பு கண்காணிப்பு சேவையான டவுன் டிடெக்டர் கூறுகையில், "கிட்டத்தட்ட 81% பயனர்கள் தகவல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 16% பேர் ஒட்டுமொத்த பயன்பாட்டு செயல்பாட்டில் சிக்கல்களை சந்தித்துள்ளனர்" என தெரிவித்துள்ளது.