ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட நபர் பலி

56பார்த்தது
ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட நபர் பலி
சேலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதில் 35 வயது நபர் உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் (35) என்பவர் திருப்பூரில் வேலை செய்து வந்தார். இவர் ரயில் பொதுப்பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த டுட்டூ என்பவர் தனக்கு படிக்கட்டில் இடம் வேண்டும் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, நவீனை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் படுகாயமடைந்த நவீன் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி