தமிழகத்தின் புதிய பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 12) பதவியேற்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் படிப்படியாக கட்சியை உயர்த்தி வந்தனர். ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ மூலம் பாஜக கோபுரத்துக்கு மேல் கலசங்கள் வைத்தவர் அண்ணாமலை. தமிழ்நாட்டில் பாஜக கொடி எங்கும் பறக்க வேண்டும். நிச்சயமாக தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும்” என்றார்.