வழக்கு எண் 18/9” திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. அதன் பிறகு மாநகரம், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில், ஸ்ரீ தற்போது மிகவும் ஒல்லியாக எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். மேலும் அவர் ஒரே அறைக்குள் அடைந்துக்கிடப்பது போல் அவரது இன்ஸ்டா புகைப்படங்களின் மூலம் தெரிய வருகிறது. மேலும், ஆபாசமான ஒரு தொனியில் ஒரு வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.