சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில், பெண் ஒருவர் சாலையின் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அந்த பெண் மீது மோதியது. விசாரணையில், ஆட்டோ ஓட்டியது ஒரு சிறுவன் என தெரியவந்துள்ளது. மேலும், 2 சிறுவர்கள் ஆட்டோ பின்னால் அமர்ந்திருந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், 3 சிறுவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.