கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே நேற்று (ஏப்ரல் 11) சூறைக்காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் 500 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம், தரையோடு தரையாக சாய்ந்து நாசமாகின. இதுகுறித்து விவசாயி கூறியதாவது, “இந்த மக்காச்சோள பயிர்களை கடன் வாங்கி நடவு செய்துள்ளோம். தற்போது இருக்கும் நிலைமையை தமிழக அரசு கண்டு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.