
தமிழ்நாட்டில் ஏப்.13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று (ஏப்.08) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுகுறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஏப்.13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.