நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி படம் வெளியாகவுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 18-ந் தேதி இசை வெளியீட்டு விழாவுடன் டிரைலரும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.