வங்கிகளுக்கு வருகிற 10ஆம் தேதி (11ஆம் தேதி தவிர) முதல் 4 நாட்கள் விடுமுறை ஆகும். 10ஆம் தேதி மகாவீரர் ஜெயந்திக்கு வங்கிகளுக்கு விடுமுறை. 12ஆம் தேதி 2-வது சனிக்கிழமை வருவதால் அன்றும் விடுமுறை. 13-ம் தேதி ஞாயிறு. 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு. அதனால் அந்த 2 நாட்களும் விடுமுறை. மேற்கண்ட 4 நாட்களிலும் வங்கிகள் திறக்கப்படாது. இணைய வங்கி சேவை இருக்கும். இதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளவும்.