கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வெளியான 'லாபதா லேடீஸ்' திரைப்படம். ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை நடிகா் அமீா்கான், இயக்குனர் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில், இந்தப் படம் 2019-ல் வெளியான அரேபிய குறும்படமான 'புர்கா சிட்டி' கதையைப் போலவே இருப்பதால், படத்தின் கதை திருடப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இதன் திரைக்கதை ஆசிரியர் பிப்லாப் கோஸ்வாமி மறுப்பு தெரிவிதுள்ளார்.