
IPL: சென்னை அணிக்கு மரண அடி கொடுத்த RCB
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற IPL போட்டியில் CSK vs RCB அணிகள் மோதின. டாஸ் வென்ற CSK பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய RCB அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் 51 ரன்கள் எடுத்தார். 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இறுதியில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 50 ரன்கள் வித்தியாசத்தில் RCB அணி வெற்றிபெற்றது.