தமிழக சட்டப்பேரவையில், முன்னறிவிப்பு இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கோரினார். மரபின்படி அறிவிப்பே கொடுக்காமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என சபாநாயகர் பதில் அளித்தார். பேச அனுமதி அளிக்காததால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இன்று ஒரு நாள் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.