வேலூர் மாவட்டத்தில் நீட் தகுதி தேர்வில் பங்கேற்கவுள்ள 266 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் பயிற்சி கையேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 28) ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கினார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.