தவெகவின் முதல் பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது, "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். இன்று தமிழ்நாடு இருக்கும் சூழலில் நாம் புதிய வரலாறு படைக்க தயாராவோம். எது அரசியல்? ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழகத்தை சுரண்டுவது தான் அரசியலா? இங்கு மன்னராட்சி நடக்கிறது. கதறல் சத்தம் அதிகமாக கேட்கும் என நினைக்கிறேன். மன்னராட்சி முதல்வர் அவர்களே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே” என பேசினார்.