2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார். திருவான்மியூரில் நடைபெற்ற தவெகவின் முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய விஜய், "தமிழகத்தில் இரண்டு முனை போட்டி தான். அது தவெக மற்றும் திமுக இடையே தான். 2026-ல் அறுதிப் பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமையும்" என ஆவேசமாக கூறியுள்ளார்.