வேலூர் நகரம் - Vellore City

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது

வேலூர் ஓல்டு டவுன் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பு ராஜா (34). இவர் ஓல்டு டவுன் மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி உதயா என்கிற உதயகுமார் கத்தியை காட்டி ரூபாய் 2500 பணத்தை வழிப்பறி செய்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அன்பு ராஜா வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உதயகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 2500 ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் உதயகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా