மே 1ஆம் தேதி முதல் ATM மூலம் 3 முறைக்கு மேல் எடுத்தால் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும் என RBI அறிவித்துள்ளது. இலவச மாதாந்திர வரம்பைத் தாண்டி ATM-இல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.2 அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம், இலவச வரம்பை மீறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களிடம் இப்போது ரூ.23 வரை வசூலிக்கப்படும். முன்னதாக, கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 ஆக நிர்ணயிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியின் ATM-களில் மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுக்க முடியும்.