

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் சீனிவாசன் என்பவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது குரும்பேரி கூட்ரோடு பகுதியில் லாட்டரி சீட்டுடன் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இவர் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரிய வந்தது எனவே லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து சீனிவாசனை திருப்பத்தூர் கிராமிய போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் மேலும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.