

சோழவரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா
வேலூர் அடுத்தசோழவரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா நடந்தது. இதில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை, சேலம் கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடுபாதையில் சீறிப்பாய்ந்து ஓடியது. இதில் குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டு விழாவை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். மேலும் காளை முட்டி ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது.