மியான்மரில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால் 25 பேர் பலியாகியுள்ளனர். மியான்மர் தலைநகரில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க் நகரில் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 25 பேர் பலியான நிலையில், 43 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், உயிர்பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.