தொகுதி மறுசீரமைப்புக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய சந்திரபாபு நாயுடு, "மக்கள் தொகையை கட்டுப்படுத்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மேற்கொண்ட நடவடிக்கைகளே, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், இப்போது பிரச்சனையாக மாறியுள்ளது. இதை செய்ய தவறிய பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அது சாதகமாகி உள்ளது" என்று கூறியுள்ளார்.