உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றும் ஊழியரும் ஆசிரியையும் தலை முடியை பிடித்து கட்டி உருண்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டை நடந்துகொண்டிருக்கும்போது மாணவர்கள் சிலர் சண்டையிட்டவர்களை காலால் எட்டி உதைத்தனர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சண்டைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.