அணைக்கட்டு - Anaicut

அணைக்கட்டு: ரயில் நிலையத்தில் பைக் திருட்டு - இருவர் கைது!

வேலூர் மாநகர் சாய்நாதபுரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் கடந்த 3-ம் தேதி தனது பைக்கை கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு ரயிலில் வெளியூர் சென்றார். மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது அவரது பைக் காணாமல் போன நிலையில், இதுகுறித்து வினோத்குமார் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார் ரயில் நிலையைம் அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வினோத்குமாரின் பைக்கை வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த வசந்த்குமார் (22), நிஷாந்த்குமார் (23) ஆகிய இரு வாலிபர்கள் திருடிச் செல்வது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் இன்று கைது செய்த தெற்கு காவல் நிலைய போலீசார், அவர்களிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా