அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில், ஒரு பெண் நிர்வாணமாகி, வெறித்தனமாக நடந்து, மக்களைக் கடித்து, பென்சிலால் சிலரைக் குத்திய வினோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சமந்தா பால்மா என்ற அந்தப் பெண் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் நிர்வாணமாகி, உணவக மேலாளர் உட்பட இரண்டு பேரை கத்தியால் குத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத தொடக்கத்தில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.