ஜோலார்பேட்டை - Jolarpet

சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு.

*ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு 3க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் தாமதம். ரயில்வே ஊழியர்கள் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். * திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரி முத்தூர் ஏ கேபினுக்கும் ஜோலார்பேட்டை ரயில் நிலைய யார்டுக்கும் நடுவே ஹம்ப் லைனில் சரக்கு ரயில் சக்கரங்கள் இருப்பு பாதையில் இருந்து தடம் புரண்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்ததில் இந்த சரக்கு ரயில் ஆனது ஈரோட்டில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு செல்வதற்காக வந்ததாகவும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வரும்பொழுது மெயின் லைனில் இருந்து யார்டுக்குள் நுழைவதற்காக ஹம்ப் லைனுக்கு தடம் மாறிய போது சக்கரங்கள் தடம் புரண்டு இருப்பு பாதையில் இருந்து கீழே இறங்கி உள்ளது என்றும் இந்த அசம்பாவிதத்திற்கு இருசக்கர வாகனம் பழுது ஏற்பட்டதா அல்லது இருப்பு பாதையில் பழுது உள்ளதா என்று தற்போதைக்கு தெரியவில்லை பழுது பார்க்கும் பணிகள் முழுமை அடைந்ததும் அது குறித்து தகவல் தெரிய வரும் என்று கூறினர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా