
ராணிப்பேட்டையில் பள்ளியை ஆய்வு செய்த கல்வித் துறை அமைச்சர்
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு வகுப்பறைகள், மாணவ மாணவியர்களின் கற்றல் திறன் அனைத்தையும் கேட்டறிந்து மாணவர்களை படிக்குமாறு சொல்லி கேட்டார். உடன் ஆசிரியர்கள், அதிகாரிகள், திமுக தொண்டர்கள் பலரும் இருந்தனர்.