குடியாத்தம் - Kudiyatham

பெண் உள்பட 2 பேரிடம் ரூ. 12¼ லட்சம் மோசடி!

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்துள்ள மனுவில், "நான் சென்னையில் உள்ள ஒரு ஐ. டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். குடியாத்தம் பகுதியை சேர்ந்த நிர்மல் என்பவர் எனது தாய்க்கு அறிமுகமாகி உங்கள் மகன்களுக்கு மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். இதனை நம்பி நான் நிர்மலுடன் சென்னையில் உள்ள லோகேஷ்குமார் என்பவரிடம் நேரில் சென்று பல்வேறு தவணைகளாக ரூ. 9 லட்சத்து 95 ஆயிரத்து 100 கொடுத்தேன். அதன் பின்னர் பணி நியமன ஆணை நகல் வந்து விட்டதாக கூறி லோகேஷ்குமார், நிர்மல் மூலமாக சில பணி நியமன ஆணை நகல்களை கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் லோகேஷ்குமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆகவே, என்னை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டள்ளது. இதேபோல் வேலூர் காங்கேயநல்லூரை சேர்ந்த ஒரு பெண் அளித்துள்ள மனுவில், எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக எனது பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூறினார். தனக்கு தெரிந்த நபர் ஒருவர் இருக்கிறார் என்றும் தானும் தனது மகளுக்காக அவரிடம் பணம் கட்டியுள்ளேன் என்றும் கூறினார். இதனை நம்பி நான் அவரிடம் 2¼ லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே எனது பணத்தை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా