கட்டாய கல்யாணம்.. கணவருக்கு காபியில் விஷம் வைத்த மனைவி

52பார்த்தது
கட்டாய கல்யாணம்.. கணவருக்கு காபியில் விஷம் வைத்த மனைவி
உ.பி: பங்கேலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் குமார்(30) என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த 25-ம் தேதி பிங்கி கொடுத்த காபியை குடித்த அனுஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் குடித்த காபியில் விஷம் கலந்துள்ளதாக தெரிவித்தனர். பிங்கி தலைமறைவானார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பிங்கியை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி